லெனோவா நிறுவனத்தின் புதிய லெனோவா யோகா ஸ்லிம் 7i லேப்டாப் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து இப்போ பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்களை விட கம்ப்யூட்டர் தயாராப்பில் முதன்மை நிறுவனங்களில் லெனோவாவும் ஒன்று. இந்நிறுவனம் தற்போது ப்ரீமியம் வகையில் அட்டகாசமான அம்சங்களுடன் புதிய லேப்டாப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
லெனோவா யோகா ஸ்லிம் 7i பெயர் கொண்ட இந்த லேப்டாப் இன்டெல் கோர் 10ஆவது ஜெனரேசன் பிராசசரில் இயங்ககூடியது. அத்துடன் என்விடியா ஜீஃபோர்ஸ் எம்எக்ஸ்350 ஜிபியு, நீண்ட பேட்டரி லைஃப், விண்டோஸ் ஹெலோ முக அங்கீகார வசதி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன
இந்த லேப்டாப்பின் சிறப்பம்சமே,இதன் டிஸ்ப்ளேவை 180 டிகிரி வரையில் திருப்பலாம். அதாவது தரை மட்டமாககூட லேப்டாப்பை விரிக்கலாம்.
லேப்டாப் சூடவாதைத் தடுக்கும் வகையில் Q கண்ட்ரோல் இன்டலிஜனட் கூலிங்க் சிஸ்டம் உள்ளது.
இதன் அம்சங்கள்:
இயங்குதளம்: விண்டோஸ் 10
டிஸ்ப்ளே சைஸ்: 1920×1080 பிக்சல். கூடவே டால்பி விஷன் ஆதரவு கிடைக்கிறது. குறிப்பாக இந்த லேப்டாப்பின் திரையை 180 டிகிரி வரை திருப்பிக் கொள்ளலாம்.
பிராசசர்: இன்டெல் i7 கோர்
குறைந்த பட்சம் ரேம் + கிராபிக்ஸ் கார்டு: 2ஜிபி ரேம் மற்றும் நிவிடியா ஜி போர்ஸ் MX350 GDDR5 கிராபிக்ஸ் கார்டு கொண்டது.
அதிகபட்சம் 512 ஜிபி எஸ்எஸ்டி + 16ஜிபி LPDDR4X ரேம், 3,200MHz கிளாக் ஸ்பீடு, 512GB SSD உள்ளிட்ட அம்சங்கள் நிறைந்துள்ளன
எடை: 1.36 கிலோ மட்டுமே.
எனவே, எங்கு வேண்டுமானாலும் எளிதாக கையில் எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலை ரூ. 79,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.