இந்தியாவில் ரெட்மி 9 சீரிஸின் வெற்றியை தொடர்ந்து சியோமி நிறுவனம் விரைவில் ரெட்மி 9i பட்ஜெட் ஸ்மார்ட்போன்னை அறிமுகப்படுத்தவுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் தனக்கென தனி ராஜ்யத்தை சியோமியின் ரெட்மி நிறுவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பட்ஜெட்டை மையமாக வைத்து அந்நிறுவனம் வெளியிடும் அனைத்து போன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.
அண்மையில் ரெட்டிமி 9, ரெட்மி 9 பிரைம், என ரெட்மியின் 9 சீரிஸ் வெற்றியை தொடர்ந்து விரைவில் ரெட்மி 9i பட்ஜெட் ஸ்மார்ட்போன்னை அறிமுகமாகவுள்ளதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ரெட்மி 9A என்ற பெயரில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்த புதிய ரெட்மி 9i ஸ்மார்ட்போன் நேச்சர் கிரீன், சீ ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய கலர் விருப்பங்கள் உள்ளிட்ட மூன்று வண்ண கலர்களில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 4 ஜிபி ரேம் + 128 மெமரி என 2 வசதிகளுடன் வரவுள்ளது.
ரெட்மி 9i அம்சங்கள்:
ஓஎஸ் ( இயங்குதளம்):ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய MIUI 12
டிஸ்ப்ளே: 6.53′ இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளே
பிராசசர்: 2GHz ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 25 பிராசஸர்
IMG PowerVR GE8320 GPU
கேமரா: 13 மெகாபிக்சல் பின்புற கேமரா
5 மெகாபிக்சல் செல்பி ஷூட்டகேமரா
பேட்டரி: 5,000 எம்ஏஎச்
சார்ஜிங்: 10W