Home சுற்றுலா & உணவு பறவைகள் சரணாலயங்கள்..... இந்தியாவில் தவராமல் பார்க்க வேண்டியவை......

பறவைகள் சரணாலயங்கள்….. இந்தியாவில் தவராமல் பார்க்க வேண்டியவை……

நாம் அனைவரும் நமது அன்றாட வாழ்வில் அதிகம் கேட்கக்கூடிய சப்தங்கள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் கூட்ட நெரிசலான இடங்களில் கேட்கப்படும் கூச்சல்கள். நீங்கள் எப்பொழுதாவது பறவைகளின் குரல் கேட்டு விழித்திருக்கிறார்கள் அல்லது அவ்வப்போது பறவைகளின் சப்தத்தை கேட்டுளீர்களா? இதற்கு பலரிடம் நிச்சயம் இல்லை என்ற பதிலையே எதிர்பார்க்கலாம். பறவைகளை அவற்றின் வாழ்விடங்களுக்கே சென்று கண்டு களிப்பது போன்ற ஒரு புத்துணர்வு எதிலும் கிடைக்காது. இந்தியாவில் பல அற்புதமான பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. அங்கு கூட்டமாகக் கூடும் பறவைகள் ஒன்றாக இணைந்து பாடுவதைக் கண்டு களிக்கலாம். நமது வாழ்நாளில் ஒரு முறையாவது அவசியம் பார்க்க வேண்டிய சரணாலயங்களின் பட்டியல் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், தமிழ்நாடு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பறவைகள் வருகின்றன. வங்காளதேசம், பர்மா, சைபீரியா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பறவைகள் வருகை தருகின்றன. இங்கு வரும் பறவைகளில் நீர்க்காகங்கள், பல வகை கொக்கு இனங்கள், நாரைகள், கூழைக்கடா, நீர்க்கோழி போன்றவை குறிப்பிடத்தக்கது.

தட்டேகாடு பறவைகள் சரணாலயம், கேரளா எங்கு உள்ளது

கேரளாவில் உள்ள தட்டேகாடு பறவைகள் சரணாலயம் 25 சதுர கி.மீ பரப்பளவில், பெரியார் ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஏறத்தாள 300க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் உள்ளன. அந்த பகுதியையே வாழ்விடமாக கொண்டுள்ள பறவைகள் மட்டுமின்றி வேறு இடங்களில் இருந்தும் அவ்வப்போது பறவை இனங்கள் குடி பெயரும். இந்த சரணாலயம் கோத்தமங்கலத்திலிருந்து 12 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இங்கு கொக்கு, பாம்பு தாராக்கள், நீர்க்காகங்கள், செந்தலைப் பூங்குருவி, நீண்டவால் பக்கி, மீசை மற்றும் கொண்டைக் குருவிகள் ஆகியவற்றை காணலாம். இந்த பகுதியில் பல அழகான மற்றும் வண்ணமயமான பட்டாம்பூச்சிகளையும் ஒருவர் கண்டு களிக்கலாம்.

பரத்பூர் பறவைகள் சரணாலயம், ராஜஸ்தான்

இந்தியாவின் மிகச் சிறந்த பறவைகள் சரணாலயங்களில் பரத்பூர் பறவைகள் சரணாலயம் ஒன்று. இது 29 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டது. இந்த சரணாலயத்தை விருப்பம் உடையவர்கள் நடந்தும் சென்றும் அல்லது ஆட்டோ ரிக்ஷா கொண்டு சென்று பார்க்கலாம். வறண்ட புல்வெளிகள், வனப்பகுதிகள் மற்றும் ஈரநிலங்களை கொண்ட இந்த சரணலாயம் புலம்பெயர் பறவைகளுக்கு உகந்ததாக அமைந்துள்ளது. இங்கு பொதுவாகக் கௌதாரி, மரங்கொத்தி, மீன்கொத்தி, குக்குறுவான்கள் உள்ளிட்ட பறவைகளை காணலாம். சீசன் காலங்களில் சைபீரியா மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து பறவைகள் இந்த இடத்திற்குப் புலம்பெயரும். அப்போது கிரேன்கள், கூழைக்கடா, கழுகுகள் மற்றும் பருந்துகள் உள்ளிட்டவற்றை பார்க்கலாம்.

பின்சார் வனவிலங்கு சரணாலயம், உத்தரகண்ட்

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பின்சார் வனவிலங்கு சரணாலயம் இயற்கை அழகுடையது. இந்த இடம் ஜாண்டி தார் மலைகளின் உச்சியில் அமைந்துள்ளது. மேலும் இந்த சரணாலயத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பறவைப் பார்வையாளர்கள் வருவார்கள். இந்த பகுதியில் கிட்டத்தட்ட 200 வகையான பறவைகள் உள்ளன. இதில் தையல்சிட்டு, கருங்குருவி, பச்சை கிளிகள்,வண்ணாத்திக்குருவி, மரங்கொத்தி ஆகியவை அடங்கும். இங்கிருந்து, நந்தா கோட், த்ரிஷுல், கம்பா மற்றும் பஞ்சூலி போன்ற சிகரங்களை மக்கள் கண்டு களிக்கலாம்.

நம்தபா தேசிய பூங்கா, அருணாச்சல பிரதேசம்

இந்த பூங்கா 1985 சதுர கி.மீ நிலப்பரப்பை கொண்டது. இங்கு 500 வகையான பறவைகள் வருகை தரும். மேலும் பல்வேறு வனவிலங்குகளையும் உள்ளடக்கிய பூங்கா இது. இந்த பூங்காவில் வன முகாம்கள் இருப்பதால் விருப்பம் உள்ளவர்கள் ஒரு நாள் தங்கி அங்குள்ளவற்றை கண்டு புதுவிதமான அனுபவத்தை பெறலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here