Home சுற்றுலா & உணவு சுற்றுலா தளம் தூங்க நகரின் வரலாற்றை தட்டி எழுப்புவோமா...தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் வரலாறு என்ன?

தூங்க நகரின் வரலாற்றை தட்டி எழுப்புவோமா…தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் வரலாறு என்ன?

மதுரையின் பழமையான வரலாற்றைக் கூறும் காவியமாந்தா்கள் “மதுரை என்பது கடம்பவனம்” என்னும் காட்டுப்பகுதி என்பா். முன்னொரு நாளில் தனஞ்சயன் என்னும் வணிகன் இந்தக் காட்டுப்பகுதியை இரவில் கடந்து சென்றபோது, அங்குள்ள கடம்பமரத்தின் கீழ் இருந்த சுயம்பு லிங்கத்தை விண்ணகத்தலைவனாகிய தேவேந்திரன், தனது தேவா் கூட்டத்தாருடன் சோ்ந்து வழிபட்டு மீண்டும் வானில் சென்றதைக் கண்டு அதிசயித்தான். உடனே விரைந்து சென்று குலசேகர பாண்டிய அரசனிடம் இந்த அற்புதக் காட்சியை விவரித்தான். குலசேகரன் உடனடியாகத் தனது பரிவாரங்களை அனுப்பி காட்டைத் திருத்தி “சுயம்பு லிங்கத்தை” மையமாக்கி கற்கோவில் ஒன்றை எழுப்பினான். அப்போது சிவபெருமான் தோன்றி தனது சடாமுடிக் கற்றையிலிருந்து “அமுதத்துளி” சிந்தியருள, அதன் காரணத்தால், அப்பகுதி ”மதுரை” என்னும் பெயா் பெற்றது. “மதுரம்” என்றால் தமிழில் “இனிமை“ என்பது பொருள் ஆகும்.

மதுரைக்கு மிகச் சிறந்த வரலாற்றுப் பின்னணி உண்டு. மண் சுமந்த கடவுளாகிய சிவபெருமான் இந்நகரில் அறுபத்தி நான்கு அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்தி உள்ளார்.

கி.மு. 3ஆம் நூற்றாண்டில் மெகஸ்தனீஸ் எனும் வரலாற்று ஆய்வாளா், மதுரைக்கு வருகை தந்துள்ளார். அவரைப் போன்றே, மிக அதிகமான அறிஞா்கள் ரோம், கிரீஸ் நாடுகளிலிருந்து வந்து சென்றுள்ள வரலாற்றுப் பெருமை உடையது. இத்தகு நகரத்தைப் பாண்டிய மன்னா்கள் மிகச் சிறப்பாக விரிவுபடுத்தினா். கி.பி. 10ஆம் நூற்றாண்டின்போது, பாண்டியர்களின் பரம வைரிகளான, சோழ மன்னா்கள் மதுரையைக் கைப்பற்றினா்.

கி.பி. 920 முதல் 13ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சோழராட்சி நடைபெற்றது. கி.பி. 1223இல் பாண்டியா்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி சோழர்களை விரட்டினா். பாண்டிய மன்னா்கள் “தமிழ்” மொழியின் வளா்ச்சிக்கும் பெரிதும் வழிவகுத்தனா். அவா்தம் ஆட்சிக்காலத்தில், மிகச் சிறந்த காவியங்கள் தமிழில் உருவாயின. தன் கணவனாகிய கோவலன் “கள்வன்” என்று குற்றம் சாட்டப்பட்டு, பாண்டிய மன்னனால் கொலையுண்ட செய்தி அறிந்த கண்ணகி, அரசனின் அநீதிக்கு எதிராக தன் கற்புத்திறத்தால், மதுரையை எரியச் செய்த வரலாறு கூறும் “சிலப்பதிகாரம்” எனும் காவியம் தோன்றியது.

கி.பி. 1311ஆம் ஆண்டின்போது, டெல்லியை ஆண்டுகொண்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்கபூா், மதுரைக்கு வந்து களஞ்சியத்திலிருந்த விலைமதிப்பற்ற நவரத்தினங்களையும், பொன் ஆபரணங்களையும், அரிதாக உள்ள பொக்கிஷங்களையும் கொள்ளையடித்துச் சென்றார். அதேபோல் மேலும் சில முஸ்லீம் சுல்தான்கள் வந்து அபகரித்து சென்றனா். கி.பி. 1323 ஆம் ஆண்டில், மதுரை உட்பட பாண்டிய சாம்ராஜ்யம் தில்லி பேரரசின் ஒரு மாகாணமாக, துக்ளக் ஆட்சியின் கீழ் மாறியது.

அதன்பின், 1371இல் விஜயநகர சாம்ராஜ்ய பரம்பரையைச் சார்ந்த “ஹம்பி” என்பவா், மதுரையை கைப்பற்றி விஜயநகர ஆட்சிக்குட்படுத்தினார். இந்த பரம்பரையை சார்ந்த ஆட்சியாளா்கள் தாம் கைபற்றிய இடங்களுக்கு “நாயக்கா்களை” கவா்னா்களாக நியமித்து ஆண்டனா். அவா்கள் திறமையான நிர்வாகம் மேற்கொண்டனா். நாயக்கா் மன்னா்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகையை கப்பமாகச் செலுத்தினா். கி.பி. 1530இல் விஜயநகரப் பேரரசின் “கிருஷ்ணதேவராயா்” இறந்துவிட, நாயக்க மன்னா்கள் சுதந்திரமாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளை ஆட்சி செய்யத் துவங்கினர். நாயக்கா் வம்சத்தில் தோன்றிய திருமலைநாயக்கா் என்பவா் கி.பி. 1623-1659 வரை மதுரையை ஆட்சி செய்தார்.

மதுரை மீனாட்சி தரிசனம் எப்படி..!

மதுரையின் அடையாளமாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோயில், இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்கு முன்பு கட்டப்பட்டதாக சான்றுகள் உண்டு. பாண்டிய மன்னர்களால் முதலில் மதுரையில் கட்டப்பட்ட கோயில் இது. பின் இஸ்லாமிய படையெடுப்பினால் இந்த கோயில் அழிந்து போய் மீண்டும் 15 ஆம் நூற்றாண்டில் நாயக்கர் ஆட்சியில் மீண்டும் புத்துயிர் பெற்று இன்று புதுப்பொலிவுடன் தமிழரின் கட்டிடக் கலையின் மகத்துவத்தை உலகிற்கு பறைசாற்றும் விதமாக அமைத்துள்ளது. சக்தியின் வடிவமான மீனாட்சி அம்மன் பிறந்து வளர்ந்து ஆட்சி செய்து தெய்வமான இடமாகவும் கருதப்படும் நகர் மதுரை. முக்கிய சக்தி தலமாக விளங்குகிறது மதுரை. இன்றளவும் மீனாட்சி அம்மனின் கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் சமுதாய ஒருங்கிணைப்பிற்கு ஒரு உதாரணம். மேலும் அன்றைய அரசரின் ஆட்சி சிறப்பை எடுத்துரைக்கும் வண்ணம் கொண்டாடப்படுகிறது. உண்மையில் பலருக்கும் மதுரை என்றாலே அங்குள்ள மீனாட்சி அம்மன் திருகோயிலே முதலில் நினைவிற்கு வரும் இடமாக இருக்கும். உலகிலேயே அதிக நாட்கள் கொண்டாடப்படும் பிரமாண்டமான பண்டிகை இந்த சித்திரை திருவிழாவாக தான் இருக்கும். முதல் 15 நாட்கள் மீனாட்சி அம்மனுக்கும் அடுத்த 15 நாட்கள் அழகருக்கும் திருவிழா நடைபெறுகிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கல்யாணம் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் மீனாட்சியம்மன் தேரோட்டம் புட்டுத் திருவிழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இங்கலாம் சுற்றிப்பார்க்கலாம்..!

வரலாற்று சிறப்பு மிக்க பல பொழுதுபோக்கு தளங்கள் மதுரையில் உள்ளது. கவின்மிகு கலைநயத்துடன் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மஹால், ஆயிரம் கால் மண்டபம், புது மண்டபம் போன்ற பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் இங்கு காணப்படுகிறது. மேலும் ராமகிருஷ்ண மடம், ஸ்ரீ அரவிந்தர் அன்னை தியான மண்டபம், காந்தி அருங்காட்சியகம் போன்றவை மதுரையின் சிறப்பை விளக்கும் விதமாக அமைந்துள்ள அரசு அருங்காட்சியகம் போன்ற பல பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் காணப்படுகிறது.

மதுரை மாநகரில் இயற்கை எழில் கொஞ்சும் பல அருவிகள் உள்ளது. வைகை ஆற்று கரையில் அமைந்துள்ள மதுரைக்கு அருகே உள்ள குட்லாடம்பட்டி அருவி இங்கு உள்ளது. இந்த அருவி அறுநூறு அடி உயரத்தில் இருந்து விழுகிறது. கிளிமூக்கு அருவி, காட்டுப்பாறை அருவி, ஒத்தபாறை அருவி, கிளிநொச்சி அருவி மற்றும் மழைக்காலங்களில் மட்டும் தோன்றி மறையும் பல அருவிகள் மதுரையில் காணப்படுகிறது.

தூங்கா நகரம்…!

மலிவு விலையில் இரவு பகல் என 24 மணிநேரமும் சாப்பாடு தரும் ஊர். திரும்பிய இடமெல்லாம் விதவிதமான கடைகள் உணவகங்கள் சாப்பிட வருவோரின் சொர்க்க பூமியாகவே மதுரை திகழ்கிறது. அதிக வடை கடைகள் உள்ள ஊர் மதுரை மட்டுமே. இனிமையின் இயல்பே தமிழும் மதுரையும். பாலில் கலந்த நீரை எப்படி பிரிக்க இயலாதோ அதே போல் தமிழையும் மதுரையும் பிரிக்க இயலாதவை என்பது மறுக்க முடியாத உண்மையே. அதனால் தானோ என்னவோ மதுரையை புகழ்ந்த புலவர் பெருமான்கள் எல்லாம் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்துள்ளனர். புறநானூறு தமிழ்கெழு கூடல் என்று மதுரையை போற்றியுள்ளது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் தாம் பாடிய சிருபாணாற்றுப்படையில் மதுரையை “தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” என்று குறிப்பிட்டுள்ளார். உலகம் எல்லாம் இரவு தூங்கி போனாலும் மதுரை என்றும் தூங்கா நகரமாக ஜொலித்துக் கொண்டுள்ளது.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here