Home வணிகம் விவசாயம் காபி இரகங்கள் மற்றும் சாகுபடிகள் என்னென்ன?

காபி இரகங்கள் மற்றும் சாகுபடிகள் என்னென்ன?

காபி (காபியா கெனிபோரா / காபியா அராபிகா) இரகங்கள்
அராபிகா காப்பி இரகங்கள்: இரகத்தேர்வுகள் 7,9,10,காவேரி மற்றும் எச்.ஆர்.சி

ரொபஸ்டா காப்பி இரகங்கள்: இரகத்தேர்வுகள் 274, 270, 3

மண்

காப்பி தோட்டங்களின் மண் 4.5 முதல் 6.5 கார அமில நிலை கொண்டதாகவும், அதிக ஆழமுடையதாகவும், அதிக அங்கக பொருள் நிறைந்ததாகவும் இருத்தல் நல்லது.
ஏப்ரல் – மே மாதங்களில் ஆதரவு மழை இரு இரகங்களுக்கும் அவசியமானது

விதை

இப்பயிரினை விதை மூலம் உற்பத்தி செய்யலாம். நோயற்ற நன்கு முதிர்ந்த பழங்களை விதைக்கென்று தனியாக அறுவடை செய்யவேண்டும். தண்ணீரில் மிதக்கும் வெற்று விதைகளை நீக்கிவிடவேண்டும். நல்ல பழங்களிலிருந்து சதைப்பற்றினை நீக்கி விதையினை தனியே பிரித்தெடுக்கவேண்டும். பின்பு மரத்தூள் கலந்து நிழலில் உலர வைக்கவேண்டும். நன்கு திரண்ட விதைகளை பிரித்தெடுத்து அக்ரோசான் என்றும் மருந்துடன் நேர்த்தி செய்வதால் பூஞ்சாணநோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.

நாற்றாங்கால்

நல்ல வடிகால் வசதி, இருபொறை, மண்ணில் அதிக அளவிலான அங்கக சத்துக்களுடைய மண்வகைகளை தண்ணீர் மற்றும் நிழல் பகுதியில் தேர்வு செய்யவேண்டும். மேட்டு / மேடை பாத்திகள் தேவையான அளவு நீளமும் 1 மீட்டர்அகலமும் 15 நெ.மீ உயரம் கொண்டிருக்குமாறு அமைக்கவேண்டும். 1 x 6 பரப்பளவு உள்ள பாத்திகளுக்கு 30-40 கிலோ மக்கிய தொழு உரம், 2 கிலோ சலித்த சுண்ணாம்பு மற்றும் 400 கிராம் ராக்பாஸ்பேட் ( பாறை உப்பு) இடவேண்டும். களிமண் மற்றும் இதர மண்வகைகளுக்கு மணல் சேர்ப்பதன் மூலம் நல்ல வடிகால் மற்றும் காற்றோட்ட வசதி கிடைக்கும். நாற்றாங்காலில் விதைக்கும் முன்னர் விதைகளை அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் நேர்த்தி செய்தல்வேண்டும்.

விதைகளை டிசம்பர் – ஜனவரி மாதங்களில் 1 அங்குல இடைவெளியில் விதையின் தட்டையான பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு விதைக்கவேண்டும். அதன் பின்னர் மெர்ரிய அடுக்குகளான மணல் / கலவை இட்டு பின் வைக்கோலை மூடவேண்டும். பாத்திகளுக்கு தினசரி தண்ணீர் தெளிக்கவேண்டும். மேலும் நேரடியான சூரிய ஒளியினைக் கட்டுப்படுத்த பந்தலிட்டு ஒளியினைக் கட்டுப்படுத்தவேண்டும். விதைத்த 45வது நாளில் விதைகள் முளைத்துவிடும். பின் அவற்றினை இரண்டாம் நிலை நாற்றாங்கால் (அ) பாலித்தீன் பைகளில் நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

பொதுவாக காப்பிப் பயிரானது மானாவாரிப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வரகின்றது. மேலும் மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தெளிப்பு நீர் (ஸ்பிரிங்ளர்) மூலம் நீர் செலுத்துவதன் மூலம் பூக்கள் மலர ஆரம்பிக்கும்.

அரபிக்கா காப்பியில் குறைந்த அளவிலான நிழல் இருக்கும் பொழுது இப்பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்குத் தேவையான லிண்டேன் பவுடரை (2 கிலோ) 180 லிட்டர் தண்ணீரில் கலந்த தண்டுப்பகுதியில் படுமாறு தடவுதல் வேண்டும். மேலும் துளைப்பகுதியில் மோனோக்குரோட்டோபாஸ் நனைந்த பஞ்சு கொண்டு மூடவேண்டும்.

காய் துளைப்பான்

சரியான தருணத்தில் அனைத்து காய்களையும் பறித்துவிடவேண்டும். அதிகமான நிழல் பகுதியினைக் குறைத்து விடுதல்வேண்டும். என்டோசல்பான் 35இசி மருந்தினை 3340 மிலி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். மலர்ந்த 120-150 நாளில் அறுவடை செய்யலாம். எனவே பூச்சிக்கொல்லி பயன்பாட்டினை அதற்கேற்றவாறு செய்யவேண்டும்.

மாவுப்பூச்சி மற்றும் பச்சை செதில் பூச்சிகள்

மாவுப்பூச்சியினைக் கட்டுப்படுத்த குயினால் பாஸ் 35 இசி 2 மில்லி லிட்டர் (அ) பென்தியான் 1 மிலி (லிட்டர்) (அ) பெனிட்ரோதையான் 1 மிலி x லிட்டர் என்ற அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

ஒரு ஏக்கருக்கு 300 கிரிப்டோலிமேஸ் மான்ட்ரோசரி என்றும் கொண்றுண்ணி வண்டுகளை விட வேண்டும்.

வெர்டிசிலியம் லெகானி பூசுண வித்துக்களை 6 x106 எனும் அளவில் தெளிக்கவும் (அ) கீழ் கொடுக்கப்ட்டுள்ள ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளிக்கவும்.

அறுவடை

அறுவடை நவம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை இருக்கும். காப்பி பழங்களை பழுத்த உடன் அறுவடை செய்யவெண்டும். சதைப்பற்ளினை நீக்குவதற்கு முன் பழுக்காத காய்களைப் பிரித்து எடுக்கவேண்டும். இதனைத் தனியாக உலர வைத்து செர்ரி காப்பியாக பயன்படுத்தலாம்.

தேர்ந்தெடுத்து பறித்தல் : அக்டோபர் பிப்ரவரி மாதங்களில் பழுத்த பழங்களை பறிக்கவும்.

முக்கிய அறுவடை: டிசம்பர் மாதங்களில் நன்கு முதிர்ந்த பழங்களை பறிக்கவும் அதிக மகசூல் இவ்வறுடையில் கிடைக்கும்.

உருவுதல்: மீதம் உள்ள காய் மற்றும் பழங்களை அறுவடை செய்யவும்.

சுத்தப்படுத்துதல் : கீழே உதிர்ந்துள்ள காய் பழங்களை சேகரிக்கவும்.

சதைப்பகுதியினை நீக்குவதற்கு முன் பழுக்காத காய்களைப் பிரித்து எடுக்கவேண்டும். இதனைத் தனியாக உலர வைத்து செர்ரி காப்பியாக பயன்படுத்தலாம்.

மகசூல் : ஒரு எக்டரிலிருந்து 750-1000 கிலோ மகசூல் அறுவடை செய்யலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here