Home வணிகம் தொழில் எங்கள் பிளான் இதுதான் - மனம் திறந்த ரியல்மி சிஇஓ

எங்கள் பிளான் இதுதான் – மனம் திறந்த ரியல்மி சிஇஓ

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ரெட்மி நிறுவனத்திற்குப் போட்டியாக தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ரியல்மி. 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரியல்மி நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் ஒரு அசுர வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்நிலையில், ரியல்மி இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மாதவ் ஷேத் கூறுகையில், “வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் இந்தக் காலச்சூழலில் ஸ்மார்ட்போன்கள் முக்கியமானதாக மாறியுள்ளன. நுகர்வோர் தங்களுக்கு தேவையான பொருள்களை பண்டிகை காலங்களில்தான் வாங்குவார்கள். வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு ஏற்ப சந்தையில் தற்போது பொருள்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இதை குறிவைத்து நாங்கள் புதிய ஸ்மார்ட்போன்களையும் AIOT தயாரிப்புகளையும் விரைவில் வெளியிடவுள்ளோம்.

இந்தியாவில் நம்பர் 1 ஆன்லைன் பிராண்டாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. வரும் பண்டிகை காலத்தில் சுமார் 20 முதல் 25 விழுக்காடு வரையிலான சந்தையை (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்மார்ட்போன் விற்பனையையும் சேர்த்து) கைப்பற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

இந்தாண்டு இறுதிக்குள் 80 லட்சம் AIOT தயாரிப்புகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இந்த இலக்கை அடைய வரவிருக்கும் பண்டிகை காலம் எங்களுக்கு முக்கியமானது. ஏனென்றால், ஒட்டுமொத்த விற்பனையில் சுமார் 50 விழுக்காடு விற்பனை இந்தப் பண்டிகை காலங்களில் மட்டுமே நடைபெறும்” என்றார்.

Counterpoint ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, இந்தியாவில் சியோமி (29 விழுக்காடு), சாம்சங் (26 விழுக்காடு), விவோ(17 விழுக்காடு) ஆகிய நிறுவனங்களுக்குப் பின் 11 விழுக்காடு சந்தை இருப்புடன் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாக ரியல்மி உள்ளது.

கரோனா காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடிகிறதா என்று கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர்,” பண்டிகை கால தேவையைப் பூர்த்தி செய்ய எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்கிறோம்.

ஆனால், பாதுகாப்புதான் எங்கள் முதன்மையான முன்னுரிமை. உற்பத்தியை அதிகரிக்க எங்கள் பணியாளர்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் தள்ள முடியாது. பண்டிகை காலத்தை குறிவைத்து நாங்கள் ஏற்கெனவே உற்பத்தியை தொடங்கிவிட்டோம். வரும் காலத்தில் தேவையைப் பூர்த்தி செய்வோம் என்று நம்புகிறோம்” என்றார்.

மேலும் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரியல்மி நார்சோ 20 சீரிஸ் பற்றி பேசிய அவர், “மே மாதம் நாங்கள் ரியல்மி நார்சோ 10 மற்றும் நார்சோ 10A ஸ்மார்ட்போன்களை வெளியிட்டோம். அதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதுவரை 10 லட்சம் நார்சோ ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. இந்த வெற்றிதான் நார்சோ 20 சீரிஸை வெளியிட எங்களுக்கு நம்பிக்கையை அளித்தது” என்றார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here