கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. இதனால் பலர் வேலை வாய்ப்புகளை இழந்தும், குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும் சூழலும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் முன்னணி கட்டுமான நிறுவனம் ஒன்றில் பல்வேறு பதவிகளில் 61 காலி பணியிடங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அது குறித்து விவரங்களை தற்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
சிஎம்கே ப்ரோஜெக்ட்ஸ் ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்தில் 8 பதவிகளுக்கு காலி பணியிடங்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதற்கு டிப்ளமா இன் சிவில் பி.இ., பி.டெக்., சிவில் எஞ்சினியரிங் மற்றும் சிவில் தொடர்பான மற்ற படிப்புகள் படித்திருக்கும் பட்டதாரிகள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இங்கு குறைந்தபட்சம் 8 ஆயிரம் ரூபாய் தொடங்கி அதிகபட்சமாக 50 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
இங்கு ப்ராஜெக்ட் மேனஜர், துணை ப்ராஜெக்ட் மேனஜர், சீனியர் எஞ்சினியர், சைட் எஞ்சினியர், ஜூனியர் எஞ்சினியர், ஃப்ரஷர், எ க்யூ எஸ், க்யூ சி என்ற 8 பதவிகளில் காலி பணியடங்கள் உள்ளன.
சிவில் கட்டுமான தொழிலில் 5 முதல் 20 வருடம் அனுபவம் உள்ளவர்கள் ப்ரோஜெக்ட் மேனஜர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அதில் இரண்டு இடங்கள் காலியாக உள்ளது.
துணை ப்ராஜெக்ட் மேனஜர் பதவிக்கு 12 முதல் 15 வருடம் வரை அனுபவம் இருக்க வேண்டும். இதற்கு 4 காலி இடங்கள் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சீனியர் எஞ்சினியர் பதவிக்கு 8 முதல் 10 வருடம் அனுபவம் இருக்க வேண்டும். இதற்கு 15 காலி இடங்கள் உள்ளன.
சைட் எஞ்சினியர் பதவிக்கு விண்ணப்பிப்போர் 5 முதல் 7 வருடங்கள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதற்கு 17 இடங்கள் காலியாக உள்ளது.
3 முதல் 4 வருடம் அனுபவம் உள்ளர்கள் ஜூனியர் எஞ்சினியர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளது.
சிவில் எஞ்சினியரிங்-இல் ஃப்ரஷர் ஆக இருக்கும் பட்டதாரிகள் அல்லது 2 வருடம் வரை அனுபவம் உள்ளவர்கள் ஃப்ரஷர் என்ற பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.
3 முதல் 5 வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள் க்யூ எஸ் என்ற பதவிக்கு விண்ணப்பிக்கலாம். இதில் 5 இடங்கள் காலியாக உள்ளன.
க்யூ சி பதவிக்கு விண்ணப்பிப்போருக்கும் 3 முதல் 5 வருடங்கள் அனுபவம் இருக்க வேண்டும். இதில் 6 பணியிடங்கள் காலியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை, மதுரை, ராமநாதபுரம் என்று மூன்று இடங்களிலும் சிஎம்கே நிறுவனம் சிறப்பாக இயங்கி வருகிறது. இங்கு பணிபுரிவோருக்கு உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தங்கும் இடமும் வழங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்பும் சிவில் பட்டதாரிகள் மற்றும் சிவில் சம்பந்தப்பட்ட வேலை தேடும் அனைவரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து நேர்காணலைச் சந்திக்கலாம்.