Home வணிகம் இறக்குமதி & ஏற்றுமதி இயல்பு நிலைக்கு திரும்பும் ஏற்றுமதி....!

இயல்பு நிலைக்கு திரும்பும் ஏற்றுமதி….!

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி மீண்டும் சகஜ நிலைமைக்குத் திரும்பி உள்ளதாக, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் (ஃபியோ) தலைவர் சரத்குமார் சரஃப் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஊரடங்கு காரணமாக உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால், கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 12.66 என்ற அளவுக்கு குறைந்தது. இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளதால், தொழில்துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சகஜ நிலைக்குத் திரும்பி வருகிறது.

பல்வேறு நாடுகளில் இருந்து ஏற்றுமதியாளர்களுக்கு ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால், அடுத்து வரும் மாதங்களில் ஏற்றுமதி வளர்ச்சி அடையும் எனத்தெரிகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30 ஏற்றுமதி பொருட்களில் 14 பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக, மருந்துப் பொருட்கள், சணல் பொருட்கள், சில விவசாய உற்பத்திப் பொருட்கள், பால் மற்றும் இறைச்சி உணவுகள், இரும்புத் தாதுக்கள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது.

மேலும், மத்திய அரசு பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். இதன் மூலம், வியட்நாம், வங்கதேசம், மலேசியா போன்ற சிறிய நாடுகளின் வர்த்தகப் போட்டிகளை சமாளிக்க முடியும்.

அத்துடன், ஏற்றுமதியாளர்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here