Home வணிகம் இயற்கையின் ஏழை விவசாயிக்கு ஏணியாகும் எலுமிச்சை!

இயற்கையின் ஏழை விவசாயிக்கு ஏணியாகும் எலுமிச்சை!

ஏழை விவசாயியா? அது யாரு?

என்னடா, இயற்கையின் ஏழை விவசாயினு நினைக்கிறீர்களா! ஆம், இயற்கையின் இருப்பு அதிகம் இல்லாத வறண்ட பூமியில் எலுமிச்சை நடவு செய்தால், சாகுபடியில் ஏற்றம் பெற வைக்கும் ஏணியாக இருக்கும் இந்த எலுமிச்சை பயிர்.

எலுமிச்சை எப்படி?

எலுமிச்சை, வடக்கு சீனாவிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த பயிர். ஆசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்ட எலுமிச்சை, வெப்ப மண்டலப் பிரதேசங்களில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் வளரக்கூடிய பயிர் இது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.5 முதல் 7.5 அலகு வரை உள்ள மண்ணில் சிறப்பாக வளரும். 25 டிகிரி முதல் 30 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் வளரக்கூடிய பயிர், எலுமிச்சை. வெப்பநிலை குறைந்தால் பூ எடுக்க, காய் எடுக்க, பழுக்க என அனைத்து நிலைகளிலும் தாமதம் ஏற்படும்.

இது வறட்சிப் பகுதிகளுக்கு ஏற்ற பயிர். போதிய வெப்பநிலையோடு, குறிப்பிட்ட அளவு காற்றின் ஈரப்பதமும் இருந்தால் சிறப்பான மகசூல் கிடைக்கும். அதே நேரத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலும் வளர்ச்சி குன்றும். குறிப்பாக, கடற்கரைப் பகுதிகளில் போதிய வெப்பநிலை இருந்தாலும், காற்றின் ஈரப்பதம் அதிகளவில் இருக்கும். அத்தகைய பகுதிகளுக்கு எலுமிச்சை ஏற்ற பயிரல்ல. மண்ணில் இரண்டு மீட்டர் ஆழத்துக்கு நல்ல மண் கண்டம் இருக்க வேண்டும். நிலத்தில் வடிகால் வசதி இருக்க வேண்டும். இதற்குக் குறைவான வேலையாள்கள் இருந்தாலே போதுமானது. சரியாகப் பராமரித்தால் வஞ்சகம் இல்லாமல் வருமானம் கொடுக்கக்கூடிய பயிர் எலுமிச்சை.

தமிழ்நாட்டில் எலுமிச்சை செட் ஆகுமா?

தமிழ்நாட்டில் நிலவும் வறண்ட சூழலுக்கு ஏற்ற பயிர் எலுமிச்சை. கொஞ்சம் தண்ணீர், குறைவான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும் பயிராக இருப்பதால், பல விவசாயிகள் விரும்பி எலுமிச்சைச் சாகுபடியில் ஈடுபடுகிறார்கள்.

எலுமிச்சை சீசன் எப்படி?

எலுமிச்சையை ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும், டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலும் நடவு

அதிக மகசூல் தரும் ரகம் எவை?

பெரியகுளம்-1, செலக்சன்-49, பெங்களூரிலிருந்து வெளியிடப்பட்ட விக்ரம், பஞ்சாப் பாராமதி, லக்னோ-49, அசாம்-49 ஆகியவை பரிந்துரைக்கப்பட்ட எலுமிச்சை ரகங்கள். இருந்தபோதிலும் தமிழ்நாட்டில், பெரியகுளம்-1, விக்ரம், புளியங்குடி போன்ற உள்ளூர் ரகங்கள் இருகின்றன.

என்னடா நம்ம விவசாய பூமியில் அந்த பயிர் வளரவில்லையே, இந்த பயிர் வளரவில்லை என புலம்புவதை விட்டுவிட்டு காலத்திற்கும், நம் மண்ணிற்கும் ஏற்ற பயிர்களை பயிரிட்டால் சாகுபடி என்ன அதிக மகசூலைக்கூட அள்ளலாம்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here