Home Videos தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை!

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை!

ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமீரகத்தில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்.

அபுதாபியில் நடைபெற்ற நடப்பு சீசனுக்கான ஐபிஎல் தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி தள்ளப்பட்டது.

அதேசமயம் இத்தொடரின் முதல் போட்டியில் பங்கேற்பதால் கொல்கத்தா அணி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் – கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தால் அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

இந்த ஜோடி 90 ரன்களை சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 48 ரன்களில் ரன் அவுட் ஆனார். மறுமுனையில் பொறுப்புடன் பேட்டிங் செய்த ரோகித் ஷர்மா மூன்று பவுண்டரி, ஆறு சிக்சர் என 80 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 195 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் ஷிபம் மவி இரண்டு விக்கெட்டுகளும், சுனில் நரைன், ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து 196 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர்களாக ஷுப்மன் கில் ஏழு ரன்களிலும், சுனில் நரைன் ஒன்பது ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் கே.கே.ஆர் அணி 4.5 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 25 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் தினேஷ் கார்த்திக்- நீதிஷ் ராணா ஜோடி 46 ரன்கள் சேர்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் 30 ரன்களில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நிதிஷ் ரானா 24 ரன்களில் அவுட்டானதால் கே.கே.ஆர் அணி 11.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் 77 ரன்கள் எடுத்து தடுமாறியது.

இந்த இக்கட்டான சூழலில் தனது அதிரடியான ஆட்டத்தால் ஆண்ட்ரே ரசல் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரோ 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பாட் கம்மின்ஸ் நான்கு சிக்சர் உட்பட 33 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கேகேஆர் அணி 20 ஓவர்களில் 146 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து சந்தித்த 6 படுதோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மும்பை அணி சார்பில் பும்ரா, டிரென்ட் போல்ட், ஜேம்ஸ் பேட்டின்சன் , ராகுல் சஹார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“தகவல் போதவில்லை…”: கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

கோவாக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உலகம் முழுவதும் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு...

ஜகமே தந்திரம் கதை இதுதானா?- மதுரை சுருளி Vs லண்டன் தாதா!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனிஷ் நடிப்பில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாகும் படம் ஜகமே தந்திரம். இந்த படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ஜகமே தந்திரம் திரைப்படத்தை 17...

கொரோனாவின் ஆட்டம்: சாய்னாவின் ஒலிம்பிக் கனவு பறிபோனது!

கொரோனா பரவல் காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலின் டோக்கியோ ஒலிம்பிக் கனவு முற்றிலும் தகர்ந்துள்ளது. 32வது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பான்...

ஒன்றிய அரசா? மத்திய அரசா?: அண்ணா, கருணாநிதியால் முடியாததை செய்து காட்டுவாரா ஸ்டாலின்?

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று திமுகவினர் குறிப்பிடுவது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். திராவிடம் மற்றும் சமூக நீதி கொள்கைகளின் அடித்தளத்துடன்,...

Related News

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ!

வரிசைக் கட்டும் ஓடிடி வெளியீடு: முக்கிய நடிகர்கள் படங்கள் ஓடிடி வெளியீட்டு தேதி இதோ! கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் திரையரங்கு சென்று படம் பார்ப்பதில்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here