Home Videos இனி தமிழ் தேசியமா., சீமானிசமா?., சீமானிசம்னு ஒன்னு இருக்கா?- பதில் தரும் சீமான்

இனி தமிழ் தேசியமா., சீமானிசமா?., சீமானிசம்னு ஒன்னு இருக்கா?- பதில் தரும் சீமான்

தமிழ் தேசியத்தை முன் எடுக்கும் நாம் தமிழர் கட்சியில் அண்மை காலமாகவே சலசலப்பு நிலவி வருகிறது. மார்க்சியம், கம்யூனிசம் போல சீமானிசம் என்ற கொள்கை பிடிப்பு தலைதூக்க தொடங்கி உள்ளது. இதனால், கட்சி சீமானின் ரசிகர் மன்றமாக கட்சி மாறிவிட்டதோ என்ற அச்சம் கட்சியின் பெரும்புள்ளிகள் முதல் கடைக்கோடி தம்பிகள் வரை எழுந்துள்ளது. இதை தட்டிக்கேட்க நினைக்கும் தம்பிகளும் ஒதுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதனிடையே, கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், கட்சி பேதமின்றி செல்வாக்கு உடையவருமான கல்யாணசுந்தரத்தை கட்சியில் இருந்து விலக்க சதி திட்டம் நடைபெறுவதாக தகவல்கள் கசிய தொடங்கின. 2021 சட்டமன்ற தேர்தலில் கல்யாணசுந்தரத்தை நாம் தமிழர் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்த வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சுந்தரவள்ளி கூறியதே இதற்கு காரணம்.

இதையடுத்து கல்யாணசுந்தரத்தை கட்சியில் இருந்து விலக சதி திட்டம் தீட்டப்படுவதாகவும், கட்சியில் தாமாக விலக அவர் வற்புறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, ஜூனியர் விகடனில் அனுப்புநரின் பெயரின்றி கடிதம் ஒன்று வெளியானது. அதில் நாம் தமிழர் கட்சியை சீமான் பிரைவேட் லிமிடெடாக மாற்றியதைத் தவிர இந்தப் பத்து ஆண்டுகளில் நீங்கள் செய்த சாதனை என்ன? போன்ற பல குற்றச்சாட்டுகளும், கேள்விகளும் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்த கடிதத்தை எழுதியதே அதிருப்தியில் உள்ள கல்யாணசுந்தரம் தான் என சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கல்யாணசுந்தரம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கடிதத்தை நான் எழுதவில்லை.ஆனால் கடிதத்தில் உள்ள கருத்துகளை ஆமோதிக்கிறேன். ஏன் சீமானே கடிதத்தில் உள்ள சில கருத்துகளை ஆதரிப்பார். சீமானிசம் என்று ஒரு கொள்கையே இல்லை. என்னை கட்சியில் இருந்து விலக்க சதி நடப்பதாக தோன்றுகிறது. சீமானை சந்திக்க கடந்த 5 மாதங்களாக முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன் என குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கல்யாணசுந்தரம் மற்றும் ராஜீவ் காந்தியை சொந்த பிள்ளைகள் போல வளர்த்தோம். ஆனால் , என்னை பற்றிய கீழ்தனமான விமர்சனங்களை எல்லாம் கல்யாணசுந்தரம் ரசிக்கிறார். சீமானிசம் என்பது சீமானைப் பற்றி பேசுவதில்லை. சீமான் பேசியதை எடுத்துப் போடுகிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலைதான் சீமான் பேசுகிறான். அதை சீமானிசம் என போடுவதில் என்ன பிரச்சனை?. அவர்கள் என் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் செத்தாலும் கட்சி உடையாது என கூறினார்.

இந்த பேட்டி வெளியான பிறகு, நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி கட்சியிலிருந்து விலகுவதாக ட்விட்டரில் அறிவித்தார். இது ஒரு புறம் இருக்க, சீமான் கூறியது எல்லாம் பொய் என பேராசிரியர் கல்யாணசுந்தரம் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தநிலையில், தேர்தல் வெற்றிகளை பார்ப்பதற்கு முன்பே, நாம் தமிழர் கட்சி காணாமல் போய்விடுமோ என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...

நதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்!

முகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...

சூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா?

தமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன?

வெற்றி நடை போடுமா தமிழகம்? – அதிமுக கூட்டணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...

Related News

மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு!

கடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here